யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய முதல் மருத்துவர் : ஓர் அமெரிக்கர் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன்
Description
உலகக் கிறிஸ்தவ மிசன்களது வரலாற்றில் முதல் மருத்துவக் கலாநிதியாக விளங்கியவர் டேவிற் லிவிங்ஸ்டன். இவர் ஆபிரிக்காவில் மருத்துவராகப் பணியாற்றச் செல்ல 20 வருடங்களுக்கு முன்பே மருத்துவக் கலாநிதி ஜோன் ஸ்கடர் மற்றும் அவரது மனைவி திருமதி ஹரியற் வோட்டர்பரி ஸ்கடர் இருவரும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து தமது மிசன் பணியை ஆரம்பித்தனர்.
உலகில் முதன்முதல் மேலைத்தேச மிசனரி மருத்துவமனையைப் பண்டத்தரிப்பிலே ஆரம்பித்து மருத்துவராகப் பணியாற்றிய ஜோன் ஸ்கடர் (1793.09.03 – 1855.01.13) இலங்கையின் வடபகுதியில் (யாழ்ப்பாணத்தில்) கடமையாற்றிய முதலாவது தகுதிவாய்ந்த மருத்துவர் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர் என்ற கௌரவத்துக்கும் உரியவர். யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் பரவிய வாந்திபேதி மற்றும் மஞ்சட்காமாலை நோயைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவர் ஸ்கடர் வெற்றிபெற்றார்.
அவர் சத்திர சிகிச்சை மேற்கொள்வதில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தார். சத்திரசிகிச்சையின் போது வழங்குகின்ற மயக்கமருந்துகள், குருதி மாற்றீடு, நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் எவையுமே அக்காலத்தில் பயன்பாட்டுக்கு வரவில்லை.
#ezhuna #jaffna #history #hospital #doctor #SriLanka #யாழ்ப்பாணம் #மருத்துவ_வரலாறு